Tips

நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பலன்களை அளிக்கும் வெந்தயம்! – Methi Benefits in Tamil

மூலிகை குணம் கொண்ட வெந்தயத்தின் இலையும் விதையும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பல மருத்துவ குணங்களால் வெந்தயத்தை எல்லோரது வீட்டிலும் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். வழக்கமாக நமது உடல்நலத்திற்கும் முடி வளர்ச்சிக்கும் பயனளிக்கும் வெந்தயம், வேறு பல வகைகளிலும் பலனளிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக நமது உணவின் சுவையை கூட்டுவதற்கும், பேர்கால சமயத்தில் நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கும் தோல் நலத்திற்கும் வெந்தயம் பயனளிக்கிறது.

வெந்தயம் எளிதாக கடைகளில் கிடைக்கக்கூடியது. இவை விதையாகவும் தூளாகவும் கிடைக்கிறது. வெந்தயத்தை எப்போதும் காற்று புகாத டப்பாவில் இருட்டான, குளிரான பகுதியில் வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்தால் பல மாதங்களுக்கு வெந்தயம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

வெந்தயத்தால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்: What Fenugreek Seeds Can Do For You

தோல் பராமரிப்பு

முகத்தில் ஈரப்பதம் போகாமல் பாதுகாக்கிறது; முகப்பருவை போக்குகிறது;

முடி பராமரிப்பு

முடி உதிர்வை தடுக்கிறது; பொலிவை கூட்டுகிறது; பொடுகு தொல்லையை நீக்குகிறது; நரை முடி வராமல் தடுக்கிறது

உடல்நல பராமரிப்பு

நீரிழிவை கட்டுப்படுத்துகிறது; நெஞ்சு வலி மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது; கொழுப்பையும் உடல் எடையும் மூட்டு வீக்கத்தால் ஏற்படும் வலியையும் குறைக்க உதவுகிறது; சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது; மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைபிடிப்பை நீக்குகிறது.

இளமையான தோற்றத்தை தருகிறது

உங்கள் தோலுக்கு தேவையான இளமை தோற்றத்தை அளிப்பதோடு முகச்சுருக்கத்தை போக்கவும் என பல பயன்களை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தருகிறது வெந்தயம்.

இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்ட ஒரு மேஜை ஸ்பூன் வெந்தயத்தோடு ஒரு மேஜை ஸ்பூன் தயிரை சேர்த்து பசை போன்ற பதத்திற்கு கொண்டு வாருங்கள். இந்த பசையை உங்கள் முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

வெந்தயத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் தன்மைகள், நமது தோல் வயதான தோற்றத்தை அடைய விடாமல் பாதுகாக்கிறது. தயிரில் உள்ள லேக்டிக் ஆசிட், நமது தோலை மென்மையானதாக மாற்றுகிறது.

முகப்பருவை போக்குகிறது

இரவு முழுவதும் ஊற வைத்த நான்கு டீ ஸ்பூன் வெந்தயத்தோடு நான்கு கப் தண்ணீரை சேர்த்து ஒரு 15 நிமிடம் கொதிக்க வையுங்கள். அதன்பிறகு வடிகட்டிய நீரை, துணியை கொண்டு தினமும் இரண்டு முறை உங்கள் முகத்தில் ஒத்தடம் கொடுங்கள். மீதமுள்ளதை உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துகொள்ளலாம். வெந்தயத்தில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் டியோஸ்ஜெனின் என்ற பொருள் உள்ளதால் முகப்பருவை போக்க பயன்படுகிறது.

முடி உதிர்வை தடுப்பதற்கும் முடி வளர்வதற்கும் பயன்படுகிறது

ஒரு கப் தேங்காய் எண்ணெயோடு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை கலக்குங்கள். சூரிய ஒளி படாத குளிரான இடத்தில் இதை மூன்று வாரம் வைத்திருங்கள். இதில் முடி வளர்வதற்கு தேவையான புரதச்சத்தும் நிகோடினிக் ஆசிடும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பூஞ்சையால் ஏற்படும் பொடுகு தொல்லையையும் போக்குகிறது. மேலும் நரை முடி வளராமலும் இருப்பதற்கு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உங்கள் முடி அழகாகவும் பொலிவோடும் இருக்க வேண்டுமா? Do you need your hair to be stunning and exquisite?

இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற விடுங்கள். காலையில் அதை அரைத்து உங்கள் தலை முடி முழுவதும் நன்றாக தேய்த்து கொள்ளுங்கள்,. அரை மணி நேரம் கழித்து முடியை கழுவுங்கள். வெந்தயத்தில் உள்ள லெசிதின் என்ற பொருள் முடிக்கு தேவையான பொலிவை கொடுக்கிறது.

நீரிழிவை கட்டுபடுத்துகிறது

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால் அது அவர்களின் உடல்நலத்தில் நேர்மறையான மாற்றங்களை கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதோடு இன்சுலின் எதிர்ப்பையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது

நெஞ்சு வலியால் உலகளவில் பலர் இறக்கின்றனர். இருதயத்திற்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் தான் நெஞ்சு வலி வருகிறது. நெஞ்சு வலி ஏற்படும் போது உங்கள் இருதயத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாமல் பாதுகாக்கிறது வெந்தயம்.

புற்றுநோயை தடுக்கிறது

வெந்தயத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் புற்றுநோயை தடுக்க பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதவிடாய் தசைப்பிடிப்பை போக்குகிறது

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகளையும் தசைபிடிப்பையும் வெந்தயம் போக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அழற்சியை நீக்கும் பண்பு வெந்தயத்தில் உள்ளதால் தான் மதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகளை போக்க இது உதவுகிறது. மேலும் சோர்வு, தலைவலி, குமட்டல் ஆகியவற்றையும் குறைக்க வெந்தயம் உதவுகிறது.

கொழுப்பை குறைக்கிறது

நமது உடலில் உள்ள கொழுப்பை, அதுவும் முக்கியமாக கெட்ட கொழுப்பை குறைக்க வெந்தயம் உதவுகிறது. இதிலுள்ள நரின்ஜெனின் என்ற ஃபிளாவொனாய்டு கொழுப்பின் அளவை குறைக்கிறது.

வெந்தயத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகளால் மூட்டு வீக்கதால் ஏற்படும் வலியை குறைக்கவும் இது பயன்படுகிறது.

செரிமான பிரச்சனையை தீர்க்கிறது

வயிற்றுப் புண்களுக்கும் வாயுத் தொல்லைக்கும் ஜீரன கோளாறுகளுக்கும் மிகச்சிறந்த மருந்து வெந்தயம். இதில் இயற்கையாகவே அமைந்துள்ள செரிமான டானிக் மற்றும் மென்மை தன்மையும் உங்கள் வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புண்களை ஆற்றுகிறது.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கிறது

வெந்தயத்தில் உள்ள ஃபிளாவொனாய்டு தன்மையால் சிறுநீரகத்தில் ஏதும் பிரசனை ஏற்படாமல் அரண் போல் பாதுகாக்கிறது. உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது கல்லீரல். இவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலில் காயம் ஏற்பட்டால் உங்கள் உடல் நலத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்டுகிறது. கல்லீரலில் மதுவின் தாக்கத்தை குறைக்க வெந்தயம் பயன்படுகிறது.

குறிப்பு; கருவுற்ற பெண்களும் குழந்தைகளும் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

The put up நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பலன்களை அளிக்கும் வெந்தயம்! – Methi Benefits in Tamil appeared first on TopBeautySecrets.org.

Leave a Comment